Tuesday, May 19, 2009

திருப்புகழ் கோ பூஜை

ஓம் முருகா
வேலும் மயிலும் துணை
ஸ்ரீ வள்ளிமலை ஸச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்தருளிய
திருப்புகழ் கோ புஜை
திருப்புகழ்
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவிதனக் குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே யருள்வாயே
மங்கையர் சுகத்தைவெகு இங்கிதமெனுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தனைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தெங்கரையிலப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
கந்தர் அந்தாதி
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பாநு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
தேவேந்திர சங்க வகுப்பு
தரணியி லரணிய முரணிர னியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சத்தள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபட ரெனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில்
இடுபலி கொடுதிரி யிரவல ரிடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்கசு மங்கலை
எழுதிய படமெனவிருளறு சுடரடி யினை தொழுமவுனிக
ளேகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்
கனகழ னினையல ருயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழுநீர் தோய்ந்தபெ ருந்திரு
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெற
வளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரணெடு வடவரை யடியொடு பொடிபட வலைகடல்கெட
வயில் வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்
அறுமுக னொருபதொ டிருபுயனபிநவ னழகிய குறமக
டார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்க ளந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமா
ந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி யெனவரு பொருதிறன் முருகனை யருள்பட மொழிபவ
ராராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே
கந்தர் அலங்காரம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்ககேயென் றன்மனம் வேகின்றதே

காவிக் கமலக் கழலுடன் சேர்த்த்னைக் காத்தருள்வாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோற்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே

கந்தர் அநுபூதி
ஆதா ரமிலேம னருளைப் பெறவே
நீதானொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமநோ
தீதா சுரலோக சிகாமணியே

எந்தாயு மெனக் கருள் தந்தையுநீ
சிந்தா குல மானவை தீர்தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணிய யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூலோகத்த்ற் பசுக் கூட்டங்களைக் காப்பாற்றியும் அவைகளுக்குத் தன் பேரன்பைக்காட்டியும் பணி செய்தும் வந்த விஷயம் யாவரும் அறிந்ததே. மணிமேகலை யென்னும் சங்க நூலில் ஆபுத்திரனென்பவன் திக்கற்றவனாயிருந்து ஒரு பசுவுக்கு உதவி புரிந்தமையால் சக்கரவர்த்திப் பதவியை யடைந்தான். சண்டேசுர நாயனார், திருமூல நாயனார் சுவின் பெருமை நன்கு விளங்கும். சிவ தருமோத்திரம் என்னும் நூலிசுவின் பெருமை விரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் இலலத்தில் பசுக்கள் இல்லாவிட்டாலும் பசு வைத்திருப்பவர் வீட்டிற்குச் சென்றாகிலும் கோ பூஜை செய்தால் மிக்க நலமுண்டாகும். பூஜை செய்வோர்கள் மாலையில் சாம்ப்ராணி தீபமிட்டுப் பசுவின் பின் புறத்தில் ஆரத்தி செய்து நமஸ்கரிக்கவும்.
சுபம்
பின் குறிப்பு
இந்த நூல் திருப்புகழடிமை-ஸ்ரீ.கா.ரா.முருகேசப் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது.

1 comment: